பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்களினூடாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் அல்லது வண்ண பென்சில் குச்சிகளில் பூசப்பட்ட மை தரமற்றதாக காணப்படுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ஈயம் போன்ற கன உலோகங்கள் வாய்வழி உட்கொள்ளல் மூலம் உடலுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்தின்படி, குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 19 கனரக உலோகங்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் EN71-3 என சான்றிதழ் பெற்றுள்ளன.
இதற்கிடையில், குழந்தைகள் உணவின் மூலம் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவு பெட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தையில் இருந்து கொள்வனவு செய்யும் போது உபகரணங்களில் அடிப்பகுதியில் BPA யில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்த ஏற்றவை என்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
