உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள், தங்களுக்கான அனைத்துப் பாடங்களினதும் பரீட்சைகள் முடிவடைந்திருந்தால், கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பல பிரிவுகளுக்கான பரீட்சைகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அந்த மாணவர்கள் எந்தவொரு மருத்துவ அதிகாரி பிரிவிலும் தமக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாத வகையில் பாதுகாப்பாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும், 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.1 மில்லியன் மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri