பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
2021/2022 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மற்றும் 2024 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு, ஜனாதிபதி நிதியத்தின் நிதியைப் பயன்படுத்தி, புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட புலமைப்பரிசில் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் இன்று (23) அல்லது அதற்கு முன்னர் குறித்த பாடசாலைகளின் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கோரப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு விடுத்துள்ள பணிப்புரை
அதன்படி, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், தாம் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபர்களிடம் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் இன்று முதல் ஜனவரி 02, 2023 வரையிலான விடுமுறையின் போது பாடசாலை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் பொறிமுறையை வகுக்குமாறு ஜனாதிபதி செயலகம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி டிசம்பர் 30 ஆம் திகதி வரை
நீடிக்கப்பட்டுள்ள போதிலும் தெரிவு தொடர்பான ஏனைய நடவடிக்கைகளுக்கு
பயன்படுத்தப்படும் நாட்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என ஜனாதிபதி
நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
