இந்தியாவுடனான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இலங்கை தூதுவர்!
இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அமர்வு ஒன்றில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பங்கேற்றுள்ளார்.
இந்த ஆலோசனைக் குழுவின் அமர்வு நேற்றைய தினம் (05.04.2023) டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
என்.ஐ.டி.ஐ. என்ற இந்தியப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு என்பது இந்திய அரசாங்கத்திற்கு, குறிப்பாகப் பிரதமருக்குப் பொருளாதார மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக ஒரு சுயாதீன அமைப்பாகும்.

இந்திய-இலங்கை உறவுகள்
குறித்த நிகழ்வில் பங்கேற்ற மிலிந்த மொரகொட, இந்திய-இலங்கை உறவுகள், குறிப்பாக இருதரப்பு பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலும், பொருளாதார கொள்கை வழிகாட்டுதலின் மூலம் இலங்கைக்கு உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam