இலங்கை உயர்ஸ்தானிகர் - இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு!
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (21.03.2023) டெல்லியில் நடைபெற்றுள்ளது.
இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட நடத்தி வரும் தொடர்ச்சியான சந்திப்புகளின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை நனவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் எடுத்த தலைமைத்துவத்திற்காக அமைச்சர் சீதாராமனுக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஒத்துழைப்பு
இந்தநிலையில், அமைச்சர் சீதாராமன் மற்றும் உயர்ஸ்தானிகர் மொரகொட ஆகியோர் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பில் முன்னோக்கிச் செல்லும் வழி குறித்தும் விவாதித்துள்ளனர்.
இந்திய முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பது, இருதரப்பு வர்த்தகத்தை
மேம்படுத்துவது, குறிப்பாக இந்திய ரூபாய் வர்த்தக விரிவாக்கம் மற்றும்
இலங்கைக்கு இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது போன்ற வழிகள்
மற்றும் வழிமுறைகளும் ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri