இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய வங்கி வெளியிட்டுள்ள நம்பிக்கை
இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கொடுப்பனவு நிலுவை நிலைமைகளின் முன்னேற்றம் காரணமாக ஜூன் 9 ஆம் தேதி முதல் 286 Hs குறியீடுகள் தொடர்பான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தவுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயக் கொள்கை மதிப்பாய்வுக்குப் பின், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மீதான கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது எதிர்பார்க்கப்படும் அந்நிய செலாவணி வரவின் மாற்று விகிதத்தில் அழுத்தங்களை ஏற்படுத்தாது என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
அந்நிய செலாவணி
மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் பணப்புழக்க நிலைமைகள் சமீபத்திய மாதங்களில் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் வங்கி அறிவித்துள்ளது.
அரசாங்கப் பத்திரச் சந்தையில் நிகர வெளிநாட்டு முதலீட்டு வரவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
வரவு - செலவுத் திட்ட ஆதரவிற்காக பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் நிதியைப் பெற்றுள்ளது என்றும், இந்த ஆண்டின் எஞ்சிய காலத்தில் மேலதிக வரவுகள் எதிர்பார்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி
2022 இன் தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 2023 இல் சுற்றுலா மற்றும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றங்கள் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 2023 இல் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா சுமார் 19 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
மேலும், உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளத.
மேலும் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம் மற்றும் 12.00 சதவீதமாக 200 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |