தரம் குறைந்த அரிசி கூடிய விலைக்கு விற்பனை : வெளியான தகவல்
தரம் கூடிய பாஸ்மதி அரிசிக்குப் பதிலாக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட விலை குறைந்த அரிசியை கூடிய விலைக்கு விற்பனை செய்யும் மோசடியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தற்போது சுங்கத்திணைக்களத்தினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், தனியார் வர்த்தகர்களுக்கு அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
விசேட விசாரணை
அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகையில் பாஸ்மதி அரிசிக்கு இணையான தோற்றம் கொண்ட தரம் குறைந்த அரிசியும் இறக்குமதி செய்யப்பட்டு, பாஸ்மதி அரிசியின் விலையில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தற்போது சம்பவம் தொடர்பில் இலங்கைச் சுங்கத்திணைக்களம் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஊடக சந்திப்பொன்றை நடத்தி தகவல்களை வௌியிட்டிருந்த நிலையில், அதனை ஆதாரமற்ற தகவல்கள் என்று கமத்தொழில் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 14 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
