இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்க தயங்கும் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கை சுங்கத்துறையால் 1,000க்கும் மேற்பட்ட (BYD) மின்சார வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் சந்தையில் நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே மின்சார வாகனங்களில் முதலீடு செய்துள்ள நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீலக பிடகம்போல தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்த தகலை வெளியிட்டுள்ளார்.
மின்சார வாகனங்களின் இறக்குமதி
மின்சார வாகனங்களின் இறக்குமதி செயல்முறையை சீரமைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உற்பத்தியாளர் சான்றிதழ்களை சுங்கத்துறை ஏற்க மறுத்ததாலும், மோட்டார் சக்தியை சரிபார்க்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக வசதிகள் இல்லாததாலும் நுகர்வோர் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
“நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆய்வகங்களால் மட்டுமே மோட்டார் சக்தியை சரிபார்க்க முடியும். அத்தகைய வசதிகள் இல்லாமல் நடத்தப்படும் சோதனை அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தாது, நிலைமையை மேலும் மோசமாக்கும்,” என்று அவர் கூறியுள்ளார்.
எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் மோட்டார் சக்தியை உறுதிப்படுத்த சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களிலிருந்து உடனடியாக சோதனைகளைப் பெறுமாறும் மின்சார வாகன உரிமையாளர்கள் சங்கம் இலங்கை சுங்கத்துறையை வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
