600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை! - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அந்நிய செலாவணி நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில், 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை தடை செய்து வெளிநாட்டு கையிருப்புகளை சேமிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அரச பங்காளிக்கட்சிகளின் முக்கிய கூட்டமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்தகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"எங்கள் முன்னுரிமைகளை அங்கீகரிக்காதது மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் விளைவுகளுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். எமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமது முன்னுரிமைகளை வரிசைப்படுத்த தவறியதே இதற்குக் காரணம். வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருந்தால், அவை மருந்து, எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால் இப்போதும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில், நாம் விரும்பும் எதையும் இறக்குமதி செய்ய முடியாது, ”என்று அவர் கூறினார். பொருளாதார நிலைமை குறித்த உண்மையை அரசாங்கம் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு முன், இங்கே நமக்கு ஒரு உண்மையான பிரச்சனை உள்ளது என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்கு எதிரான பொதுக் கலவரங்களைத் தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து அந்நிய செலாவணி நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் விடுத்த தொடர்ச்சியான எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
"கடந்த ஆண்டு நான் ஒரு அந்நிய செலாவணி நெருக்கடி பற்றி எச்சரித்தேன். அதில் கவனம் செலுத்தாமல் சிலர் என்னை அவமானப்படுத்தினர். நான் சுட்டிக்காட்டிய இந்த உண்மையை மறைக்கவும் முயன்றனர்.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முந்தைய நாள், அரசாங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் கூட நான் இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசினேன்.
அப்போது உயர்மட்ட அமைச்சர் ஒருவர், நாட்டில் அந்நிய செலாவணி நெருக்கடி எதுவும் இல்லை என்றும், இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தெரிவித்ததாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
