முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சி
அரசாங்கத்திற்கு நெருக்கமான சிலர் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சித்து வருவதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோழித்தீவன பிரச்சினையால் கடும் நெருக்கடிக்குள் தொழில்
நாட்டுக்கு தேவையான முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன போதுமான அளவில் நாட்டுக்குள் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் நிலவும் கோழித் தீவனம் தொடர்பான பிரச்சினை காரணமாக இரண்டு தொழில்களும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமையை பயன்படுத்தி முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய முயற்சித்து வருகின்றனர்.
ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 48 ரூபா செலவாகின்றது
அத்துடன் தற்போது முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 48 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால், அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை வழங்க முடியாது.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அதனை கைவிட ஆரம்பித்துள்ளனர் எனவும் சஞ்ஜீவ தம்மிக்க மேலும் கூறியுள்ளார்.