தடையை நீக்க முடியாது! இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் வெளியானது
ஒரே சந்தர்ப்பத்தில் சகல இறக்குமதித் தடைகளையும் நீக்க முடியாது. இன்னும் எமது அந்நிய செலாவணி கையிருப்பு போதுமானளவு அதிகரிக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை நீக்க முடியாது. தடம் புரண்டுள்ள பொருளாதாரத்தை சற்று நகரத்தியுள்ளோம்.
இறக்குமதி தடையை நீக்க முடியாது

அதற்கமைய இனிவரும் பயணங்களை மிகவும் அவதானத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். எனவே ஒரே சந்தர்ப்பத்தில் சகல இறக்குமதித் தடைகளையும் நீக்க முடியாது.
இன்னும் எமது அந்நிய செலாவணி கையிருப்பு போதுமானளவு அதிகரிக்கவில்லை. எனவே அந்நிய செலாவணி கையிருப்பு முகாமைத்துவம் உள்ளிட்டவை மத்திய வங்கியினால் படிப்படியாக முன்னெடுக்கப்படும்.
அதற்கமையவே இறக்குமதி கட்டுப்பாடுகள் , தளர்வுகள் குறித்த தீர்மானங்களும் எடுக்கப்படும். இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள துறைகளைக் கண்டறிந்து , அவற்றுக்கான இறக்குமதி தடைகளை நீக்குவதற்கு முன்னுரிமையளிக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு காரணிகள் தொடர்பிலும் ஆராய்ந்து , தேவைக்கேற்ப படிப்படியாகவே இறக்குமதி தடைகள் நீக்கப்படும் என குறிப்பிட்டார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan