இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை! அபாய கட்டத்தில் சிறுவர்கள்
அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு
கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் காட்டியதாகவும், அந்த குழந்தைகளுக்கு விசேட ஊட்டச்சத்து உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை
இந்த நிலையில் இருந்து தத்தமது குழந்தைகளை காப்பாற்ற பெற்றோர்கள் வீட்டுத்தோட்ட செய்கையில் அதிக கவனம் செலுத்துவதுடன், குறுகிய காலத்தில் விளையக்கூடிய சத்துமிக்க உணவு வகைகளை பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவால் பாதிக்கப்படும் சிறுவர்கள்
இதேவேளை, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட் நோயின் போது மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை பிள்ளைகளின் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும், வைத்தியர் தீபால் பெரேரா மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
