வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலுக்கு அனுமதி: கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு
யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு பிரதேசத்தில் 300 வரையான படகுகளுக்கு மட்டும் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொண்டு 600 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக வடமாககாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(02.10.2026) நாடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது வடமராட்சி கிழக்கிலே சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், இலை குழகளை போட்டு மீன் பிடியில் ஈடுபாடுவது உட்பட பல்வேறு சட்டவிரோத தொழில்கள் இடம் பெற்று வருகின்றது.
பாதிப்பு
இதேவேளை, வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குதல் உட்பட பல்வேறு வகைகளிலும் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக வடமராட்சி கிழக்கிலிருந்து காங்கேசன்துறை வரை கடலட்டை தொழிலில் ஈடுபடுபவர்கள் கரையோரமாக சென்று வருவதாகவும், கடலட்டை பிடிக்கும் தொழிலிற்கு காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரையும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரையோரங்களால் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவதனால் கரவலைகடற்றொழிலாளர்களுக்கும், சிறு மீன்பிடி தொழிலாளர்களுக்கும் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது.எனவே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.