ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள்: யுனிசெப் நிறுவன திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெளிநாடுகளுக்கான மனிதாபிமான உதவியை குறைத்துள்ளமையினால் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் யுனிசெப் திட்டங்கள் 20 சதவீதம் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பான யுனிசெப்பின் (UNICEF) ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டில் யுனிசெப்பிற்கு 8.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் ஆண்டு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
யுனிசெப்
உலகளாவிய ரீதியில் ஐ.நா. அமைப்புகள் உட்பட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருப்பது தெளிவாகியுள்ளதுடன் யுனிசெப்பும் அதனுள் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுனிசெப் அமைப்பின் அனைத்து நிர்வாக பணிப்பாளர்களும் அமெரிக்கர்களாகவே உள்ளனர்.
தற்போது, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் எங்கள் நிதி ஆதாரங்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் அமைப்பு ரீதியாக குறைவாக இருக்கும் என கணித்துள்ளோம்," என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
