அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இலக்காகும் யேமன் நகரங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யேமன் (Yemen)- வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 50 இற்கும் மேற்பட்ட இடங்களின் மீது அமெரிக்கா (United States) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த வான்வழித்தாக்குதலானது இன்று (16) மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதல்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பதிலடி
இந்தநிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் மீதான தங்களது தாக்குதல்கள் தொடரும் எனவும் ஹவுதி படையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, நேற்று (15) இரவு ஏடன் நகரத்தின் கிழக்கு பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் அமெரிக்க கப்பலின் மீது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க கடல்வழி வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த (13) ஆம் திகதி அமெரிக்காவின் எம்.கியூ.9 ரக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் இதன்மூலம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் யேமன் மீது பரந்த 19 அமெரிக்க ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
