கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபத்தி இரண்டாயிரத்து 781.25 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள்
இதில் குடமுருட்டி குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 330 ஏக்கர் நெற்செய்கை முழுமையாக இம்மாத இறுதிக்குள் அறுவடை செய்யக்கூடிய நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் பல்வேறுபட்ட நோய் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அதாவது நெல் வயல்களில் தத்தி மடிச்சுக்கட்டி இலை சுருட்டி போன்ற நோய்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த கால போகத்திலும் இவ்வாறான நோய் தாக்கம் காரணமாக பெரும் அழிவுகளை சந்தித்த விவசாயிகள் இம்முறை சிறுபோகத்திலாவது ஓரளவு விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த போதும் இவ்வாறு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
