ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதால் ஏற்படும் தாக்கம்! - நிபுணர்களின் கணிப்பு வெளியானது
இலங்கையில் தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்படுத்துவதனால் மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) நிதியுதவியில் நேற்று நடைபெற்ற இணைய மாநாடு ஒன்றின் போது இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 33 சுயாதீன வல்லுநர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், ஆகஸ்ட் 30ம் திகதிக்க பின்னர் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டால், கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 16,700 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பொருளாதாரத்தின் மீதான தாக்கம் 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 18ம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13,712 ஆக குறையும் என்று நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். எனினும், இதனால் பொருளாதாரத்தில் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 2ம் திகதி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டால், இலங்கையின் பொருளாதார இழப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10,400 ஆகக் குறைக்கப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த தகவல் அடங்கிய அறிக்கை உலக சுகாதார அமைப்பால் சுகாதார அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.