இம்யூனோகுளோபுலின் ஊழலின் பிரதான சந்தேக நபர் ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தகவல்
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊழலின் பிரதான சந்தேக நபர், ஆய்வுச் சுற்றுப்பயணத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரான குறித்த சந்தேகநபர் நேற்று (08.01.2024) ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்காக ஆலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இவ்வாறு ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (08.01.2023) பிற்பகல் சீதுவையில் உள்ள குறித்த நிறுவன ஆலைக்கு விஜயம் செய்துள்ளனர்.
துண்டிக்கப்பட்ட மின்சாரம்
இதன்போது, வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிறுவன உரிமையாளர் ஜானக பெர்னாண்டோவும் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தேசிய மருந்துகள் அதிகாரசபை அதிகாரிகள் தங்கள் வசம் இருந்த சாவியுடன் ஆலை வளாகத்திற்குள் நுழைந்த போது, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, வளாகம் முழுவதும் இருளில் இருந்ததால், கட்டடத்தின் முன் அறைக்கு அப்பால் உள்ள இடங்களையோ அல்லது பிரதான ஆலையையோ அதிகாரிகளால் ஆய்வு செய்ய முடியவில்லை.
அதிகாரிகளின் தீர்மானம்
இந்தநிலையில், மின்சாரத்தை இயக்குமாறு ஆலை உரிமையாளரான சந்தேகநபரிடம் அதிகாரிகள் கேட்டபோது, அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
மேலும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மின்சாரத்தை எவ்வாறு இயக்குவது என்பது அவருக்கு சரியாக நினைவில் இல்லை என்றும் இதன்போது கூறியுள்ளார்.
இதனையடுத்து, அதிகாரிகள், சந்தேக நபரை மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, நாளை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்படும் போது, மாளிகாகந்த நீதவானிடம் உண்மைகளை தெரிவிப்பதாக தேசிய மருந்துக்கள் ஒழுக்காற்று அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
