மட்டக்களப்பு மாவட்டத்தில் 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, படுவான்கரை பகுதியில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை இன்றைய தினம் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்தின் 231வது படைப்பிரிவும் இராணுவத்தின் மருத்துவ பிரிவும் இணைந்து இன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ரா சினேகா தடுப்பூசிகளை இராணுவத்தினர் ஏற்றினர்.
பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் இதுவரையில் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்கள் கிராம சேவையாளர்கள் ஊடாக இனங்காணப்பட்டு இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெருமளவான இதுவரையில் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத 60வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதைக் காணமுடிந்தது.










அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
