செட்டிகுளத்தில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு
செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் 16 -19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 16 -19 வயது பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை விரைவாக மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைவாக, செட்டிகுளம் வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சூடுவெந்தபுலவு அல் - இக்பால் மகாவித்தியாலயத்தில் இன்று (27.10) 16 - 19 வயதிற்குட்பட்ட 83 மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்
கொண்டமையை அவதானிக்க முடிந்தது.




TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri