பற்றி எரியும் அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரம்! அதிரடி படையினர் குவிப்பு
அமெரிக்காவின்(USA) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்கம் (Immigration and Customs Enforcement) அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறார்.
சட்டவிரோத வெளியேற்றம்
இந்த சட்டவிரோத வெளியேற்றத்திற்கு அமெரிக்காவிலேயே மிகப்பெரிய அளவிற்கு எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக, ட்ரம்பின் கடுமையான நடவடிக்கைகளை கலிபோர்னியா அரசு ஒத்துழைக்க மறுத்துள்ளது. அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது.
கலிபோர்னியா மாகாணம் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோ நாட்டுடனும் எல்லையை பகிர்கிறது. இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கடுமையான குடிவரவு கட்டுப்பாடுகள் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாகுக்கம் (Immigration and Customs Enforcement) அதிகாரிகள், கலிபோர்னியாவில் உள்ள உணவுக் கம்பெனிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் பெரிய அளவில் திடீர் சோதனைகளை நடத்தியதால், மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
டொனால்ட் ட்ரம்ப்
இதன் விளைவாக பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டன.
பொலிஸார் கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி கலவரக்காரர்களை கட்டுப்படுத்தினர்.
சாலைகளில் வன்முறையால், கூட்ட நெரிசல் நிலவியது.
டொனால்ட் ட்ரம்ப், கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு 2,000 தேசிய பொலிஸ் துருப்பு படைகளை (National Guard)கலிபோர்னியாவிற்கு அனுப்ப உத்தரவிட்டார்.
சட்ட ரீதியான மோதல்
இது மாநில ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) அனுமதி இல்லாமல் நடந்தது என்பதால், சட்ட ரீதியான மோதல் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் உரிமை அமைப்புகள் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ட்ரம்ப் “தனிப்பட்ட வலிமையை காட்ட அரசு அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்” எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் வெளியிட்ட உத்தரவில், ‘ICE (Immigration and Customs Enforcement) மற்றும் பிற அரசாங்க ஊழியர்கள் தங்கள் வேலை செய்யும் இடங்களில், கூட்டம் மற்றும் போராட்டங்கள் நடக்கும் இடங்களில், அவர்களையும் மற்றும் அரசு சொத்துகளை பாதுகாக்க தேசிய காவல்படை துருப்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.




இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
