திங்கள் பொது விடுமுறை! சேவைகள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
குடிவரவு திணைக்களம்
எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமையன்று அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2022, ஜூன் 13ஆம் திகதி, பொது நிர்வாக அமைச்சகத்தால் சிறப்பு அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு!
போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குடிவரவு திணைக்களத்தின் மூலம் நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோர் குறித்து குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் தகவல்



