பிரித்தானிய அரசாங்கத்திற்கு அதிர்ச்சி கொடுத்த புலம்பெயர்ந்தோர்:வெளியான உண்மை தகவல்
தவறான நடத்தை மற்றும் திருடுவதற்கு சதி ஆகிய குற்றங்களுக்காக பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படையினர் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை சோதனையிட்ட போது, அந்த நான்கு எல்லை பாதுகாப்புப் படையினரில் ஒருவர் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் என தெரியவந்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் பணி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பிரித்தானியா பெருமளவு செலவு செய்து பல முயற்சிகள் செய்துகொண்டிருக்கும் நிலையில், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையிலேயே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர் பணியாற்றிவந்த விடயம் தெரியவந்ததையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
30 வயதுடைய குறித்த புலம்பெயர்ந்தோர், 20 ஆண்டுகளுக்குமுன் பால்கன் நாடுகளிலிருந்து ஒரு பதின்ம வயதினராக பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துள்ளார்.
தான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற உண்மையை மறைத்து, பொய் சொல்லி, பிரித்தானியாவில் தங்கும் உரிமையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணியிடை நீக்கம்
அத்துடன், அடிப்படை பணி மற்றும் குற்றப் பின்னணி சோதனைகளில் வெற்றிபெற்று எல்லை பாதுகாப்புப் படையில் பணிக்கும் சேர்ந்துள்ளார்.
தற்போது வேறொரு குற்றச்செயலுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது உண்மை வெளிவரவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படையிலேயே சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர் பணியாற்றிவந்த விடயம் தெரியவந்துள்ளதால், உள்துறை அலுவலக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.