கனடாவில் வேறு மாகாணங்களுக்குச் செல்ல திட்டமிடும் புலம்பெயர்ந்தோர்
கனடாவில்(Canada) அதிகரித்துள்ள வீட்டு வாடகை காரணமாக, புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் பலர், சொந்த மாகாணங்களிலிருந்து வேறொரு மாகாணத்திற்குச் செல்வது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருவதாக சமீபத்திய கருத்துக்கணிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த கருத்துக்கணிப்பின் படி, கனடாவின் உயர் வீட்டு வாடகை காரணமாக, கனேடியர்களில் 28 சதவிகிதத்தினர் வேறொரு மாகாணத்திற்குச் செல்வது குறித்து தீவிரமாக திட்டமிட்டுவருவதாக தெரியவந்துள்ளது.
வீட்டு வாடகை
18 சதவிகிதத்தினர் ஆல்பர்ட்டாவுக்கு செல்ல திட்டமிட்டுவரும் நிலையில், நாட்டை விட்டு வெளியேறவும் சிலர் திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் 16 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சொந்த வீடு இருக்கும் நிலையில், வீடு வாங்குவது பிரச்சினையாக மாறியுள்ளதோடு, இப்போது வீட்டு வாடகை கொடுப்பதே கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர், உயர் வீட்டு வாடகை காரணமாக, நாட்டை விட்டே வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
