சிக்குராய் விமானச்சேவையின் செயற்பாடுகள் அதிரடியாக இடைநிறுத்த நடவடிக்கை
சிக்குராய் எவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று இரத்மலானையில் இருந்து சீகிரியா நோக்கிச் சென்ற நிலையில் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.
குறித்த விமானத்தில் தேன் நிலவிற்காக இலங்கை வந்த லெபனான் நாட்டுத் தம்பதியினரே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அந்த விமானத்தின் பிரதான விமானியாக பண்டாரவளையைச் சேர்ந்த 31 வயதுடைய திமுது ருவன்பத்திரன என்பவரும், பெண் விமானியான 27 வயதுடைய பத்தரமுல்லையை சேர்ந்த தமாஷா அபேநாயக்க ஆகியோரே செயற்பட்டுள்ளனர்.
சீகிரியாவில் தரையிறங்குவதற்காக இந்த விமானம் பயணத்தை மேற்கொண்ட போது, அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அவதானிக்க விமானி உடனடியாக அதனைத் தரையிறக்கத் தீர்மானித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையில் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்கள் என்பதனால் அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனினும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து வயல் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் போது விமானத்தின் முன் பகுதி பாரிய சேதமடைந்துள்ளது. இந்த விமானத்தில் 40 வயதுடைய கணவரும், 29 வயதுடைய மனைவியும் தேன் நிலவிற்காகச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் லொபனான் நாட்டுப் பெண்ணிற்கு மாத்திரமே பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் உடனடியாக நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தின்றி உயிர் தப்பிய குடும்பத்தினர், தங்களுக்கு இது மறக்க முடியாத ஒரு அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் சக்குராய் (Sakurai) தனியார் நிறுவனத்தின் அனைத்து விதமான விமானச்சேவை நடவடிக்கைகளையும் இடைநிறுத்த சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க இதனைத் தெரிவித்துள்ளார். சக்குராய் நிறுவனத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானமொன்று கடந்த 22 ஆம் திகதி, பயாகல கடற்கரை பகுதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதன்போது குறித்த விமானத்தின் பயிற்றுனரும், பயிலுநர் ஒருவரும் இருந்ததுடன், அவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை. இயந்திர கோளாறு காரணமாகக் குறித்த விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதே நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 172 ரக விமானமொன்று சீகிரியவிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டான – கிம்புலாப்பிட்டி பகுதியில் இயந்திர கோளாறு காரணமாகத் தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், சக்குராய் ஏவியேஷன் லிமிட்டட் நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவை நடவடிக்கைகளையும், உடன் அமுலாகும் வகையில் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
