யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள IMF குழு
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் இன்று (14.01.2024) நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தது.
யாழ்ப்பாண விஜயம்
தொடர்ந்து, அடுத்தகட்ட கடன் பெறுகைகள் தொடர்பில் தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கைக்கான பயணத்தின் ஒரு பகுதியாக நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாணத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலரையும் இந்தக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
