சர்வதேச நாணய நிர்ணயத்திற்கு, சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் பரிந்துரை! இ.தொ.கா நடவடிக்கை
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டெழ சர்வதேசநாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் இடையே நிகழ்நிலை (ZOOM) வாயிலாக நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நாயகம் ஷோயா யோஷிடா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான பாரத் அருள்சாமி, சம்மேளனத்தின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான இணைப்பாளர் சைட் பாஷா மற்றும் நிதியத்திற்கான இணைப்பாளரும் பொருளாதார நிபுணருமான பிரான்சிஸ் கிம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
ஊழியர் மட்டத்தில் இணக்கப்பாடு
ஊழியர் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நிதித்திறனில் 48 மாதங்களில் 29 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவது தொர்பாக சர்வதேச நாணயநிதியம் உத்தியோகர் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது கடன் வழங்குனர்கள் அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ மற்றும் பணிப்பாளர்கள் அளவும் தீர்மானித்தால் மாத்திரமே இதற்கான முழுமையான அனுமதி கிடைக்கும்.
இந்நிலையில் கடந்த மே மாதம் இடம் பெற்ற கலந்துரையாடலில் இலங்கையில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக ஆரம்பித்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சர்வதேச நாணய நிதியத்திற்கு சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் ஊடாக பரிந்துரையை முன்வைக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்பொழுது பொருளாதார மீள் கட்டமைப்பு உருவாக்கப்படும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச நாணய நிதியத்திடம் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் பரிந்துரை வழங்கவுள்ளனர்.
இலங்கைக்கான பரிந்துரை
சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் நிதியத்தில் முக்கியமான வகிப்பாகம் கொண்டுள்ளமையினால் இலங்கைக்கான பரிந்துரையை வழங்குமாறு மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பல தொழில் துறைகள் வீழ்ச்சி அடைந்து உள்ளன அது நேரடியாக எமது தொழிலார்களை பாதித்து உள்ளது பலரும் தனது தொழில்களை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இன்றி அமையாதது ஒன்றாகவும். நாட்டின் பணவீக்கம் 64% ஆக அதிகரித்துள்ளது மேலும் 936 கடனாளர்களுக்கு நாம் கடன் செலுத்த உள்ளோம்.
இதன் அடிப்படை காரணங்கள் நாம் அனைவரும் அறிந்ததே இருப்பினும் ஒரு நடைமுறை சாத்தியமான பொருளாதார மீள் கட்டமைப்பு அத்தியாவசியமானதாகும் அதனையே சர்வதேச நாணய நிதியமும் கோருகின்றது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் இறுக்கமான நடைமுறை
அந்த வகையில் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு சில இறுக்கமான நடைமுறைகளை மேற்றக்கொள்ள வேண்டியுள்ளது. வாட் வரி 15% ஆகவும் உற்பத்தி வரியும் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு அரசு தனது வருமானத்தை 15% ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் சுமார் 26 அரச ஸ்தாபனங்களை தனியார்மயடுத்தவோ அல்லது மீள் கட்டமைப்புக்குள் கொண்டுசெல்லவோ உள்ளது ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தில் இவை அனைத்தும் இயங்கி மக்களின் வரி பணத்தினை விரயமாக்குகின்றன.
நாம் ஒருபோதும் அத்தியாவசிய சேவைகளையோ அல்லது தேசிய வளங்களையோ தனியார்மய படுத்த துணை நிக்க போவதில்லை மாறாக லாபம் அடையாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் சுமையாக உள்ள ஸ்தாபனங்கள் மீள் கட்டமைப்புக்குள் உள்ளவங்க பட வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி
மேலும் பெருந்தோட்ட துறை சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்பும் எமது பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் எமது தொழிலார்களின் நலன் மற்றும் உரிமைகள் தொடர்பான சரியான கட்டமைப்பு உருவாக்க படவேண்டும்.
இதுவே அதற்கான சரியான தருணம் மேலும் மீன் பிடித்துறை மற்றும் ஆடை உற்பத்தி துறை என்பனவும் இதனுள் உள்வாங்க பட வேண்டும்.
எனவே இவற்றினை கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நித்தியத்திற்கு பரிந்துரைகளை
வழங்க உள்ளதாக சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.