“சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும்” அமைச்சர்கள் மத்தியில் தீவிர ஆதரவு!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதில் பல அமைச்சர்கள் உறுதியாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியத்துறை அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்பது தமது கோரிக்கையாகும் என்று குறிப்பிட்ட அவர்,பெரும்பாலான அமைச்சரவை உறுப்பினர்கள் இந்தக் கருத்தை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
எனினும் இறுதி முடிவை நிதியமைச்சும் மத்திய வங்கியுமே எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகங்களில் அத்தியாசியப் பொருட்கள் தேங்கியுள்ளன.
வங்கிகள், அந்நிய செலாவணிக்காக காத்திருக்கின்றன. டொலர்கள் இல்லாமையால், சீனாவின் பெட்ரோ கப்பல் 11 நாட்கள் கடலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.



