IMF கடனை இழந்தால் இரு வாரங்களுக்குக்கூட நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது: அமைச்சர் பந்துல
எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் மேலும் இரண்டு வாரங்களுக்குக்கூட நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாமற் போகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை விமானப்படை தளத்தில் நேற்று (19.03.2023)ஸ்ரீலங்கா சாரதிகளுக்கான தொழில்நுட்ப நடைமுறை பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலை
“கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம். ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர், ஒரு அரசியல்வாதி பொறுப்பேற்க முடியாது.
சுதந்திரத்திற்குப் பிறகு, குறிப்பாக 77க்குப் பிறகு, நாம் உலகத்திலிருந்து கடன் வாங்கினோம். அவர்களால் பணம் செலுத்த முடியாத நிலையில், பணம் அச்சிடப்பட்டது. இது தொடர்ந்து செய்யப்பட்டது.
எனவே, இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது. அதனால்தான் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கேட்டோம். இதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் இருந்து 20 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன‘ என்று தெரிவித்துள்ளார்.

இன்று முக்கிய கலந்துரையாடல்
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இன்று (20.3.2023) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில், இலங்கைக்கான கடனை சர்வதேச நாணய நிதியம் முறைப்படி அங்கீகரிக்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 390 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக வழங்கப்பட உள்ளதென்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri