தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராட காரணம் என்ன! சபையில் சாள்ஸ் ஆதங்கம் (Video)
1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்க தனி சிங்கள மொழிச்சட்டத்தை இலங்கையில் அவசரமாக நடைமுறைப்படுத்தினார். அதன் காரணமாக மொழி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தமிழர்கள் இன ரீதியாக தாக்கப்பட்டார்கள் எனவும் தமிழர்கள் இன ரீதியாக தாக்கப்பட்டமையால் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற உரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடியதற்கு அப்பால் 1983ஆம் ஆண்டு ஜீலை மாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வெறிச்செயலுக்காக தான் தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக ஆட்சியாளர்கள் தங்கள் அட்சியை தங்க வைப்பதற்காக எடுத்த தீர்மானங்களினால்தான் இன்று இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் செல்ல காரணம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கையில் முதலில் சரியானதொரு பொருளாதார கொள்கை வேண்டும், இனங்களுக்கு இடையில் சமத்துவமான அதிகாரப்பகிர்வு வேண்டும் இவை இரண்டும் இல்லாமல் இலங்கை எந்த காலத்திலும் பொருளாதார ரீதியில் முன்னேற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பேசிய முழுமையானஉரையை இக்காணொளியில் காணலாம்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




