இலங்கைக்கு எவ்வாறு கடன் வழங்கப்படும் - IMF வெளியிட்ட முக்கிய தகவல்
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதி வசதி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு அந்த வசதியின் கீழ் 663 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும்.
2024 ஆம் ஆண்டு 665 மில்லியன் டொலர்களும், 2025 ஆம் ஆண்டு 663 மில்லியன் டொலர்களும், 2026 ஆம் ஆண்டு 662 மில்லியன் டொலர்களும், 2027ஆம் ஆண்டு 329 மில்லியன் டொலர்கள் என மொத்தமாக 2982 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
