சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களிலிருந்து இலங்கை பலவந்தமாக வெளியேற நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க

Dollar to Sri Lankan Rupee Tissa Attanayake IMF Sri Lanka Economy of Sri Lanka
By Rakesh Jun 16, 2026 07:31 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 291 ரூபாவாக காணப்பட்ட போதிலும், இன்று அது 340 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், மிக குறுகிய காலத்துக்குள் டொலரின் மதிப்பு 48 ரூபாவினால் சடுதியாக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

டொலர் மதிப்பின் உயர்வு

"இலங்கை இறக்குமதியை முழுமையாக நம்பியிருக்கும் ஒரு நாடு என்பதால், டொலர் மதிப்பின் இந்த அதீத உயர்வு காரணமாக எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களின் விலைகள் உள்நாட்டில் கடுமையாக உயர்ந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களிலிருந்து இலங்கை பலவந்தமாக வெளியேற நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க | Imf Project Tissa Athanayake Warrning Srilanka

சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்டுள்ள மறு ஆய்வு அறிக்கையில், இலங்கையின் கடன் செலுத்தும் திறன் மற்றும் இறக்குமதிக்கான நிதித் திறன் ஆகிய இரு முக்கிய சவால்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எனினும், இந்த இரு பிரச்சினைகளையும் கையாள்வதற்கான எவ்வித மூலோபாயத் திட்டமும் தற்போதைய அரசிடம் இல்லை. நாணய நிதியத்தின் இலக்குகளின்படி இலங்கை வைத்திருக்க வேண்டிய கையிருப்பு 8.6 பில்லியன் டொலர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது 6.8 பில்லியன் டொலர்களே காணப்படுகின்றது.

இதன்படி வெளிநாட்டுக் கையிருப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், 2028ஆம் ஆண்டில் கடன் மறுசெலுத்தலை ஆரம்பிக்கும் போது வைத்திருக்க வேண்டிய 14 பில்லியன் டொலர் கையிருப்பில், தற்போது 1.8 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பலமுறை சுட்டிக்காட்டியதைப் போல், நாட்டுக்குப் பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்றுக்கு அரசு செல்ல வேண்டும்.

பலவந்தமாக வெளியேற நேரிடும்

தவறின், 2028 இல் இலக்குகளை அடைய முடியாமல் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற நேரிடும்.

அரசு அரிசி விலையைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அதேவேளை, இக்காலப்பகுதிக்குள் 1,885 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களிலிருந்து இலங்கை பலவந்தமாக வெளியேற நேரிடும்! திஸ்ஸ அத்தநாயக்க | Imf Project Tissa Athanayake Warrning Srilanka 

எனினும், மக்களுக்கான எந்தவொரு நலன்புரித் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

புயலைக் காட்டி அரசு பெருமளவு நிதியைத் திரட்டிய போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நட்டஈடு வழங்கப்படவில்லை. மறுபுறம், எரிபொருள் மானியங்களை இனி வழங்க முடியாது என திறைசேரி அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணிந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. முன்னர் விலை சூத்திரம் தேவையற்றது எனக் கூறிய அரசு, தற்போது அதே விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி மக்கள் மீது வரியைச் சுமத்தியுள்ளது.

வரும் ஜூலை மாதத்திலாவது எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு அரசு அவசர நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அரசமைப்பை மீறி, நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்பாமல் தனக்கு சாதகமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க முயற்சிப்பதுடன், தணிக்கையாளர் நாயகம் பதவிக்கும் ஜனாதிபதி தனக்கு நெருக்கமான ஒருவரை நியமிக்க முயல்கின்றார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட தடை

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணிநீக்கம் தன்னிச்சையானது என மனித உரிமைகள் ஆணைக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய அரசு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூலம் தனது அரசியல் வழிகாட்டலில் தன்னிச்சையான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல், மாகாண சபைத் தேர்தலை அரசு அரசமைப்புக்கு முரணாகத் தொடர்ந்து ஒத்திவைத்து வருகின்றது. பழைய விகிதாசார முறையின் கீழ் ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட தடைகளை நீக்க அரசுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால், அரசு தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து ஓடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்..! முக்கிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை

சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்..! முக்கிய அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை

மரபணுவில் சிக்கப் போகும் பௌத்த துறவியின் மோசமான லீலைகள்

மரபணுவில் சிக்கப் போகும் பௌத்த துறவியின் மோசமான லீலைகள்

நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US