இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை போக்க நிதி அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தினால் கலந்துரையாடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு வழங்கவுள்ள ஆதரவு குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க உடன்பட்டுள்ளார்.
இதன் போது விரைவான நிதி உதவி வழங்குமாறு நிதியமைச்சர் கோரிக்கை வைத்த நிலையில், இந்த கடனுக்கான உத்தரவாதமாக இந்திய அரசாங்கம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் விரைவான நிதி உதவியை வழங்குவது நிதி செயல்முறையின் தரத்திற்கு அப்பால் உள்ள போதிலும், சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
