இலங்கையின் அசமந்த போக்கால் ஏற்பட்டுள்ள விபரீதம்
நாட்டின் கடனை மறுசீரமைக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று வெரிட்டி ரிசர்ச் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் இலங்கையின் மெத்தனமான போக்கே இதற்குக் காரணம் என அதன் பணிப்பாளரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி நிஷான் டி மெல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் திறன் மேலும் பலவீனமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலையான நிலையை நாம் எட்டவில்லை. ஆஜன்டீனா அல்லது ஈக்குவடார் போன்ற நாடுகளும் இவ்வாறான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளது.
அந்த நாடுகள் கடனை செலுத்தும் காலப்பகுதி தவறவிட்டதில் இருந்து 5 மாதங்களுக்குள் கடனை மீளவும் செலுத்தி நாட்டின் நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எனினும் 8 மாதங்களாகியும் இலங்கை கடனை செலுத்தவும் இல்லை அல்லது மேலும் சில கால அவசாகத்தை பெற சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டையும் எட்டவில்லை.
மிகவும் மந்த நிலையில் இலங்கையின் செயற்பாடுகள் உள்ளமையினால் மேலும் ஒரு வருட காலத்தின் பின்னரே கடன் பெறும் நிலை உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
