இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் அமெரிக்கா - வொசிங்டனில் (US - Washington) இன்று (15.04.2024) நடைபெறவுள்ள மத்திய ஆண்டு மாநாட்டில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், " நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பயனுள்ள கலந்துரையாடலில் பங்கேற்கத் தயாராக உள்ளோம்.
பொருளாதார முன்னேற்றம்
பங்காளித்துவம் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் இந்த மாநாடு இலங்கை, பிரகாசமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தேவையான சூழலை உருவாக்கும்.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகள் வழங்கிய ஆதரவினால் இலங்கை ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
மாறிவரும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் அதனால் எழும் பிரச்சினைகளை தீர்க்கவும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பரந்த பொருளாதார ஒத்துழைப்பில் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதே இலங்கையின் முதன்மை நோக்கமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |