சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு பிரதானி பீற்றர் ப்ரூயர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
பீற்றர் ப்ரூயர் தனது உத்தியோகபூர்வ லிங்க்ட்இன் சமூக வலைத்தளப் பக்கத்தில் இத்தகவலைப் பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, நாளை நாட்டிற்கு வருகை தரும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[Peter
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் மற்றும் நிலைமைகள் குறித்து இந்தக் குழு கண்டறிய உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையிலுள்ள பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் அதன் அடைவுகள் குறித்து விரிவான மறுஆய்வை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri