ரணிலின் தீர்மானங்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அநுர அரசாங்கத்திற்கு கூறும் அறிவுரை
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலின் தீர்மானங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார மீட்சிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த தீர்மானங்களை புதிய ஜனாதிபதி முன்னெடுப்பது மகிழ்ச்சிக்குரியது. பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விசேட தூதுக்குழுவினர் கடந்த வாரம் நாட்டுக்கு வருகை தந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
இதன்போது மூன்றாம் மீளாய்வுக்கான திகதி நிச்சயிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் நான்காம் தவணையை பெற்றுக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
பொருளாதார நெருக்கடி
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காம் தவணையாக 300 அல்லது 330 மில்லியன் டொலரை பெற்றுக் கொள்ள ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மூன்றாம் தவணை மீளாய்வு தாமதிக்கப்பட்டால் அடுத்தக்கட்ட தவணையை பெற்றுக் கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
தேர்தல் காலத்தில் பொருளாதாரத்துடன் மறுசீரமைப்புக்காக எடுத்த தீர்மானங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்ட வாக்குறுதிகளை செயற்படுத்தினால் நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெறும் என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
