திட்டத்திற்கு இணங்கியவுடன் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன்
தற்போது இலங்கை எடுத்துள்ள வெளிநாட்டுக் கடனை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள திட்டத்தை இலங்கையும் கடனாளி நாடுகளும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இலங்கைக்கான கடன் நிவாரணத்திற்கான பணிப்பாளர் சபையின் பிரேரணை நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கடன் வழங்கும் நாடுகள் மற்றும் பிணை முறி பத்திரங்களை எடுத்த சர்வதேச கடன் வழங்குநர்களின் கருத்துகளையும் சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கிறது.
வெளிநாட்டுக் கடன் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்ட பின்னர், நாணய நிதியத்தின் முதல் கடன் தவணையாக 45 கோடி அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படும்.
அதன் பிறகு, நாட்டின் கடன் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, மீதமுள்ள நிதியும் விடுவிக்கப்படும்.
இலங்கைக்கு அவர்கள் அனுமதித்த மொத்த கடன் தொகை 290 கோடி டொலர்கள் (2.9 பில்லியன் டொலர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.