ஐஎம்எப் தவிர்த்து இலங்கைக்கு வேறு வழி கிடையாது
நாட்டின் தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் தவிர்ந்த வேறு மாற்றுவழி கிடையாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியத்திடம் இலங்கை மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகள் கட்டாயம் தேவையான ஒன்று என்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதற்கு அதனைத் தவிர மாற்றுவழி கிடையாதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையவேண்டும், அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மிக முக்கியமானது. அதில் நாட்டின் வறிய மக்களின் பாதுகாப்புக்கான பல விடயங்களை நாம் உறுதிசெய்திருக்கலாம். முழுமையாக அதனது வேலைத் திட்டத்திற்கு செல்லாமல் எமது நாட்டுக்குத் தேவையான வகையில் அந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பின்னணியின் வேலைத்திட்டத்தில் தொழில்நுட்பரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். அந்த ஆய்வு அறிக்கைகள் இல்லாத நிலையிலேயே முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த ஆய்வறிக்கையை எமக்குப் பெற்றுத்தருமாறு நாம் கேட்டுள்ளோம். இதுதொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குநான், கொண்டுவந்துள்ளேன். அவரும் அதனைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
