சர்வதேச நாணய நிதிய கடன் குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது: ரோஹித
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் மகிழ்ச்சி அடைய முடியாது என நாடாமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு கடனையே வழங்குகின்றது எனவும் கடன் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும்
“நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளது.
தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனை எதிர்ப்பதாகவும் தோற்றாலும் வெற்றினாலும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதுவே ஜனநாயகத்தின் நல்ல அடையாளம்.
சர்வதேச நாணய நிதியக் கடனைக் கொண்டு உள்நாட்டு வருமானங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |