சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட ஹேஷா விதானகே
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் முயற்சியினால் சர்வதேச நாணயநிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை இலங்கை பெற்றுக்கொள்ள முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி வீரசிங்க மேற்கொண்ட முற்போக்கான நடவடிக்கைகளின் காரணமாக இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வேறொருவரின் முயற்சியை தமது வெற்றியாக்க முயற்சிப்பதற்காக அரசாங்கத்தின் உறுப்பினர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சாதனையாக காட்ட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் எந்த விதமான ஸ்திரத்தன்மையையும் காட்ட முடியவில்லை என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய வங்கி ஆளுநரின் முயற்சிகளை சீர்குலைக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தை அணுகுமாறு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு அழைப்பு
விடுத்தபோதும், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தேவையில்லை, முதலீடுகள்
மட்டுமே தேவை என ஆளும் தரப்பினால் கேலி செய்யப்பட்டதாக ஹேஷா விதானகே
சுட்டிக்காட்டியுள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 18 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
