ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணம்! கைவிடப்பட்ட தமிழர்கள்
பாதாளத்தில் விழுந்துள்ள நாட்டை, சர்வதேச சமூகத்திடமிருந்து நிதி உதவியை பெற்றுக்கொண்டு மீள கட்டியெழுப்புவதற்காகவே அனைத்தின மக்களோடும் ரணில் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய மற்றும் ஐரோப்பிய நலன்களை பெற்றுக்கொள்ளவே ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தனர். ஆனால் தமிழ் மக்களின் நலன்கள் முற்றாக கைவிடப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி
சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட நிதியுதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. அந்த முதற்கட்ட நிதியை பெற்றுக்கொண்டதற்கு பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கியது.
குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து, தான் தப்பித்துக்கொள்வதற்காக ரணில் நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பை முன்னெடுத்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,



