இலங்கைக்கு கிடைத்துள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர்!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து, ஜூலை 3 ஆம் திகதி 5ஆவது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டதாக அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சர்வதேச நாணய நிதியம் இதுவரை நாட்டிற்கு 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.
நிதிக் கொள்கை
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதிகள் தொடர்பான தற்போதைய நிலைமையை தெளிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிய கடன் தொகை 9 தவணைகளில் பெறப்பட உள்ளதாகவும், அவற்றில் 5 தவணைகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
