முக்கிய அமைச்சுகளின் அதிகாரிகளை சந்திக்கப் போகும் IMF தூதுக்குழு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு இன்று நிதி, மின்சாரம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
தற்போதைய நாட்களில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு, பல்வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளுடன் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.
தொடர் கூட்டங்கள்
அதன் பிரகாரம் இன்று (26.06.2026) மின்சார அமைச்சு, கிராமிய அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தக சபை மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் முக்கிய சவால்கள் குறித்து இந்தக் கலந்துரையாடல்களின்போது கவனம் செலுத்தவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் ஏழாவது திட்ட மீளாய்வுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் ஆயத்த செயல்முறையின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன்
இலங்கைக்கான தமது விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் மற்றும் வளர்ச்சியையும் மதிப்பீடு செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் அமுலாக்கல் முயற்சிகளை மதிப்பீடு செய்வதற்காக இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஒரு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO