ஐ.எம்.எப்பின் கடன் நிவாரணத்தில் தாமதம்
இலங்கை மற்றும் சாம்பியா போன்ற கடன் நெருக்கடியில் உள்ள நாடுகள் நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுகின்றன.
இந்த நிலையில், கடன் நிவாரணம் வழங்குவது எப்படி என்பதில் சீனாவும் மேற்கத்திய பொருளாதாரங்களும் மோதுவதால் பிணை எடுப்பதில் முன்னெப்போதும் இல்லாத தாமதம் ஏற்பட்டுள்ளதாக செனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி என்பது கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்குக் கிடைக்கும் ஒரே நிதி ஆதாரமாகும். அத்துடன் பிற நிதி ஆதாரங்களை பெற்றுக்கொள்வதில் இந்த நிதி முக்கியமானது.
மக்கள் மீது அழுத்தம்
நிதி வரவின் தாமதங்கள் அரசாங்க நிதிகள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று செனல் நியூஸ் ஏசியா குறிப்பிட்டுள்ளது.
சாம்பியாவைப் பொறுத்தவரை, சர்வதேச நாணய நிதியத்துடனான 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் ஊழியர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு 271 நாட்கள் எடுத்தன.
இந்த நிலையில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் எட்டப்பட்ட ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு பிணை எடுப்பை இறுதி செய்ய இலங்கை 182 நாட்களாகக் காத்திருக்கிறது, அதே நேரத்தில் கானாவுக்கு 80 நாட்களுக்குப் பிறகும் இன்னும் குழுவின் அனுமதி கிடைக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியம்
இதேவேளை ரொய்ட்டர்ஸ் தொகுத்த 80 க்கும் மேற்பட்ட பொதுத் தரவுகளின்படி, கடந்த தசாப்தத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பூர்வாங்க ஒப்பந்தத்திலிருந்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கையொப்பமிடுவதற்கு 55 நாட்கள் பிடித்துள்ளன.
இந்த தாமதங்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன, எனினும் கடன் வல்லுநர்கள் முக்கியமாக மற்ற வெளி கடனாளிகளுடன் ஒப்பிடக்கூடிய வகையில் கடன் நிவாரணம் வழங்க சீனா இன்னும் தயக்கம் காட்டுவதையே சுட்டிக்காட்டுகின்றனர்.
உலக வங்கியின் தரவுகளின்படி, வளரும் நாடுகளுக்கு பெய்ஜிங் மிகப்பெரிய
இருதரப்பு கடன் வழங்குபவராக உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் 138 பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா புதிய
கடன்களாக வழங்கியுள்ளது.