இலங்கை கோரியுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் - பரிசீலிக்கும் IMF
இலங்கையில் 'டிட்வா' (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகரமான தாக்கத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
அத்துடன், அதன் விரைவு நிதியளிப்பு கருவியின் (RFI) கீழ் இலங்கை கோரியுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கான கோரிக்கையை தற்போது பரிசீலித்து வருவதாக, இலங்கைக்கான பணிக்குழுத் தலைவர் ஈவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
நிதியுதவிக் கோரிக்கை
இலங்கை அதிகாரிகள் கோரியுள்ள இந்த சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக் கோரிக்கை, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் அங்கீகாரத்தைப் பொறுத்தே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவாலான காலகட்டத்தில் சர்வதேச நாணய நிதியம், இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகவும், நாடு அவசரமாக மீண்டு, புனரமைத்து, எதிர்காலத்திற்கான மீள்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் ஆவான் பாபஜோர்ஜியோ மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ஈரானுக்கு இறுகும் நெருக்கடி... மத்திய கிழக்கில் போருக்குத் தயாராகும் அமெரிக்க விமானப்படை News Lankasri