முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் தொடர்பில் IMF முக்கிய நிபந்தனை
இலங்கையுடன் விரிவான கடன் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு மற்றொரு நிபந்தனையை முன்வைத்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, சீனாவால் கட்டப்பட்ட துறைமுக நகர திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக தற்போது வழங்கப்படும் அனைத்து வரிச் சலுகைகளையும் இரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறையில் வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் வருடாந்திர நிதி இலக்குகளை அடைய முடியாது என்பதால், வரிச் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று நிதி நிதியம் அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
சுங்க வரி சலுகை
அதன்படி, முதலீட்டாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வரி மற்றும் சுங்க வரி சலுகைகளை நீக்க வேண்டியிருக்கும் என்று அறியப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கைக்கு போட்டியாக இருக்க, மாலைத்தீவு கட்டாரின் ஆதரவுடன் இந்த வகையான பாரிய முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தில் கட்டார் ஏற்கனவே 800 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை அறிவித்துள்ளது, இது அனைத்து வரிச் சலுகைகளுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |