இலங்கைக்கு புதிய செயல் தலைவரை நியமித்த சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான புதிய செயல் தலைவராக இவான் பாபஜெர்ஜியோ( Evan Papageorgiou) என்பவரை நியமித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்து தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்ட, பீட்டர் ப்ரூயருக்குப் பின்னர் புதிய செயல் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரூயர், நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயல் தலைவராக பணியாற்றினார்.
நிதி வசதி திட்டம்
2023 மார்ச்சில் அங்கீகரிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு அவர் தலைமை தாங்கினார் மற்றும் திட்டத்தின் முதல் மூன்று மதிப்பாய்வுகளையும் மேற்பார்வையிட்டார்.
நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட கடன் மறுசீரமைப்பு மற்றும் மேக்ரோ பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்களை முன்னெடுப்பதில் அவரது தலைமை முக்கிய பங்கை வகித்தது.
இந்தநிலையில், தற்போது அந்த பொறுப்பை ஏற்கும் இவான் பாபஜெர்ஜியோ, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையில் துணைப் பிரிவுத் தலைவராக பணியாற்றுகிறார்.
பிராந்தியத்தில் பொருளாதாரக் கொள்கை மற்றும் செயல்பாடுகளில் அவர் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
