சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் குறித்து விசாரணை (Video)
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைக் கைப்பற்றய கற்பிட்டி பொலிஸார், இதுகுறித்து விவாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (20.02.2023) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை சட்டவிரோதமாகக் கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, கற்பிட்டடி சம்மட்டவாடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது 19 உரைப்பைகளில் அடைக்கப்பட்ட நிலையில், சுமார் 760 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1.5 கோடி ரூபா பெருமதியென மதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த சுற்றிவளைப்பில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கற்பிட்டி பொலிஸார்
கைப்பற்றப்பட்ட பீடி இலைகளைக் கற்பிட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு ஐஸ், கேரளா கஞ்சா,
உலர்ந்த மஞ்சள் கிருமிநாசினிகள், ஏலக்காய் மூடைகள், கடலட்டைகள், சுறா இறகுகள்,
பாதனிகள், இலத்திரனியல் உபகரணஙகள் கடத்தப்பட்டு வருவதாகக் கற்பிட்டி பொலிஸார்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











