10 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மின்சார பாவனையில் ஈடுபட்ட அரசியல்வாதியின் சகோதரர்
10 ஆண்டுகளாக சட்டவிரோதமாக மின்சார பாவனையில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரரான தலத்துஓயா கபுலியெத்த பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (10) மின்சார சபையின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றுடன் இணைந்து பொலிஸார் இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
முறைகேடாக மின்சார பயன்பாடு
குறித்த தொழிலதிபர் நீண்டகாலமாக சட்டவிரோதமாக வீட்டிற்கு மின்சாரம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளாக மின்சார மீட்டரின் செயல்பாட்டை குறைத்து முறைகேடாக மின்சாரம் பெற்று வந்தததாக தெரிவிக்கப்படுகின்றது,
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சந்தேகநபரை கைது செய்து நேற்று(11.04.2023) கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றில் முற்படுத்திய போது இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரை ஜூலை 6ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.